செய்திகள்
தலைமை தேர்தல் ஆணையம்

மேற்கு வங்காளத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

Published On 2021-09-04 09:57 GMT   |   Update On 2021-09-04 10:43 GMT
மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.

மேற்கு வங்காளத்தில் உள்ள பவானிபூர், சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

இதேபோல ஒடிசா மாநிலத்தில் உள்ள பிபிலி சட்டசபை தொகுதிக்கும் அதே தினத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 4 தொகுதிகளுக்கான வாக்குகள் அக்டோபர் 3-ந் தேதி எண்ணப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.

ஆனால் தேர்தலில் அவர் தோல்வியை தழுவி இருந்ததால், குறிப்பிட்ட காலத்தில் எம்.எல்.ஏ.வாக தேர்வு பெறவேண்டும். இதனால் இடைத்தேர்தலை நடத்துமாறு மம்தா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News