செய்திகள்
மத்திய அரசு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு தேவை- மத்திய அரசு

Published On 2021-09-01 22:40 GMT   |   Update On 2021-09-01 22:40 GMT
ஊரடங்கு அமல்படுத்த வேண்டியும், குறிப்பாக பண்டிகை காலங்களில் இவற்றை கட்டாயமாக்க வேண்டும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி:

கேரளாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வர மறுக்கிறது. அங்கு நேற்றும் 30 ஆயிரத்து 803 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு இருந்தனர். மாநிலத்தில் தொற்று விகிதம் 20 சதவீதக்கும் மேல் நீடித்து வருகிறது.

அங்கு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்த தயங்குவதே தொற்று அதிகரிக்க காரணம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே தனிமையில் இருக்கும் நிலையில், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவை கூறியுள்ளன.



எனவே மாநிலத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரித்து, ஊரடங்கு அமல்படுத்த வேண்டியும், குறிப்பாக பண்டிகை காலங்களில் இவற்றை கட்டாயமாக்க வேண்டும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இவ்வாறு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாநிலத்தில் 2 வாரங்களுக்குள் தொற்று கட்டுக்குள் வரும் என நிபுணர்களும் கூறியிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன. 

Tags:    

Similar News