செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்

விவசாயிகளுக்கு ஆதரவு... ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இணைந்த எதிர்க்கட்சி தலைவர்கள்

Published On 2021-08-06 13:08 GMT   |   Update On 2021-08-06 13:08 GMT
பாராளுமன்றத்தில் 14-வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்ததால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, பெகாசஸ் மற்றும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. இதுவரை சபை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை. தினமும் சபை நடவடிக்கைகள் குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே விவாதம் நடக்கிறது. அமளிக்கு மத்தியில் குறிப்பிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

14-வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. இதன் காரணமாக அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் இன்று வரிவிதிப்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. வருமான வரி சட்டம்-1961 மற்றும் நிதி சட்டம்-2012 ஆகியவற்றை மேலும் திருத்தும் மசோதாவை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சஞ்சய் ராவத், மனோஜ் ஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், ஜந்தர் மந்தர் சென்றனர். அங்கு போராட்டம் நடத்தும் விவசாயிகளின் போராட்டத்தில் இணைந்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் 7 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடுகின்றனர். இப்போராட்டத்தை குறிக்கும் வகையில், டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் மாதிரி பாராளுமன்ற அமர்வும் நடைபெறுகிறது.
Tags:    

Similar News