செய்திகள்
சாலையை கடக்கும் மான்கள்

அடேங்கப்பா... ஒரே நேரத்தில் 3000 மான்கள் கூட்டமாக சாலையைக் கடக்கும் அற்புத காட்சி

Published On 2021-07-29 11:14 GMT   |   Update On 2021-07-29 13:02 GMT
குஜராத் தகவல் தொடர்பு துறை வெளியிட்டிருந்த வீடியோவை பிரதமர் மோடி டுவிட்டரில் ஷேர் செய்து, அற்புதம் என்று பதிவிட்டுள்ளார்.
காந்தி நகர்:

மான் துள்ளிக்குதித்து ஓடுவதை பார்க்கும்போது நம்மில் பலருக்குள்ளும் ஒருவித மகிழ்ச்சி வந்துவிடும். அதுவே ஆயிரக்கணக்கான மான்களை கண்டால் அதை ஆச்சரியம் என்று சொல்வதைவிட அபூர்வம் என்று சொல்வதே சிறப்பானதாக இருக்கும்.

அப்படித் தான் குஜராத் மாநிலம் பாவ் நகரில் உள்ள வேளவதார் தேசிய வனவிலங்கு பூங்காவில், பிளாக்பக்ஸ் மான்கள் தாவிக் குதித்து சாலையை கடந்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தலங்களில் வைரலாகி காண்போரைத் திகைக்க வைத்துள்ளது.


இந்த வீடியோவை குஜராத் தகவல் தொடர்பு துறை டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தது. பிரதமர் மோடி இந்த வீடியோவை டுவிட்டரில் ஷேர் செய்து, அற்புதம் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த தேசிய பூங்கா பாவ் நகருக்கு வடக்கு பகுதியில் உள்ளது. இது கிட்டத்தட்ட 34 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இங்கு பெலிகன்ஸ் மற்றும் பிளமிங்கோ போன்ற பல வகையான புலம்பெயர்ந்த பறவைகளையும் காணலாம்.
Tags:    

Similar News