செய்திகள்
மக்களவை

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி- மக்களவை நாளை வரை ஒத்திவைப்பு

Published On 2021-07-26 10:35 GMT   |   Update On 2021-07-26 14:14 GMT
பெகாசஸ் மற்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், இரு மத்திய அமைச்சர்கள், நீதிபதி ஒருவர் என சுமார் 300 பேரின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, எதிர்க்கட்சியினர் பெகாசஸ் விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மென்பொருளை பயன்படுத்தி அரசு ஒட்டு கேட்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தபோதிலும் எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை.

இன்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. பெகாசஸ் மற்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் பிற்பகலிலும் அமளி நீடித்ததால் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News