செய்திகள்
டிரோன்

திருப்பதி கோவில் மலை பகுதியில் டிரோன் பறப்பதை தடுக்க ரூ.25 கோடியில் நவீன திட்டம்

Published On 2021-07-23 09:28 GMT   |   Update On 2021-07-23 09:33 GMT
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ அலுவலகத்தின் மீது டிரோன் மூலம் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர் .

பாதுகாப்பு கருதி கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ அலுவலகத்தின் மீது டிரோன் மூலம் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இன்றும் அங்கு அனுமதியின்றி பறந்த டிரோன் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களில் டிரோன் பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் பகுதியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி மலைப்பகுயில் டிரோன் பறப்பதை தடுக்க ரூ.25 கோடியில் புதிய திட்டம் ஒன்றை தயாரிக்க உள்ளனர். டிரோன் திருப்பதியில் பறந்தால் அது சந்தபந்தமான அறிகுறிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கும் வகையில் நவீன ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

இதையும் படியுங்கள்... காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

Tags:    

Similar News