செய்திகள்
தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

பழங்குடியின மக்களுடன் அமர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட தெலுங்கானா ஆளுநர்

Published On 2021-07-12 16:05 GMT   |   Update On 2021-07-12 16:05 GMT
தெலுங்கானாவில் பழங்குடியின மக்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குகின்றனர். தடுப்பூசி மீது அவர்களிடம் உள்ள அச்ச உணர்வை போக்கும் வகையில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவர்களின் கிராமத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்போவதாக கூறினார்.

அதன்படி, ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கே.தண்டா கிராமத்திற்குச் சென்ற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அங்கு பழங்குடியின மக்களுடன் அமர்ந்து தனக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அத்துடன் அங்குள்ள மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 



இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானாவில் பழங்குடியின மக்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும், தடுப்பூசி மீதான தயக்கத்தை அனைவரும் தவிர்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். 
Tags:    

Similar News