செய்திகள்
ஊரடங்கு

கோவாவில் ஜூலை 19 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2021-07-11 20:25 GMT   |   Update On 2021-07-11 20:29 GMT
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
பனாஜி:

கோவாவில் இன்று 131- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,848- ஆக உள்ளது. 

இந்நிலையில், கோவா மாநிலத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 19-ம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு வளாகங்கள் ரசிகர்கள் இன்றி திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத தலங்களில் 15 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீதம் பேருடன் செயல்படலாம் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேசினோக்கள், சினிமா அரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், வாராந்திர சந்தைகள் திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News