செய்திகள்
எல்.முருகன்

மத்திய மந்திரி ஆகிறார் எல்.முருகன் -43 பேர் கொண்ட பட்டியல் வெளியீடு

Published On 2021-07-07 11:03 GMT   |   Update On 2021-07-07 17:24 GMT
இன்று மந்திரிகளாக பதவியேற்க உள்ள 43 பேர் கொண்ட பட்டியலில் ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனோவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி 2-வது முறையாக பதவி ஏற்றதற்கு பிறகு மந்திரி சபையில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இப்போது முதன்முதலாக மந்திரி சபையில் மாற்றம் செய்யப்படுகிறது. இன்று மாலை மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

மத்திய மந்திரிகளாக 43 பேர் இன்று பதவியேற்க உள்ளதாக செய்தி வெளியானது. இன்று மந்திரிகளாக பதவியேற்க உள்ள எம்.பிக்கள் பிரதமர் இல்லத்திற்கு வந்தனர். அவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் மந்திரிசபையில், இன்று மந்திரிகளாக பதவியேற்க உள்ள 43 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெயர் இடம்பெற்றுள்ளது. 

ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்த சோனோவால், ஹர்தீப் சிங் புரி, வீரேந்திர குமார், ஆர்.பி. சிங், கிஷன் ரெட்டி,  மீனாட்சி லேகி, அஜய் பட், அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் பெயர்களும் உள்ளன. ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பராசும் மத்திய மந்திரி ஆகிறார்.
Tags:    

Similar News