செய்திகள்
பாராளுமன்றம்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19-ம் தேதி கூடுகிறது

Published On 2021-07-02 17:51 GMT   |   Update On 2021-07-02 17:51 GMT
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற வேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜூலை மாதம் கூட வேண்டிய பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் காலதாமதாக செப்டம்பார் மாதம் கூடியது. அதுவும் 18 நாட்கள் நடைபெற வேண்டிய கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 11 நாட்களிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. 

கொரோனா பரவலுக்கு இடையில் நாட்டின் பொருளாதாரம் மிக முக்கியம் என்பதால் 2021-ம் ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 19-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில்  தடுப்பூசி விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News