செய்திகள்
அனுராக் திரிபாதி

12-ம்வகுப்பு தேர்வு ரத்து: மதிப்பீடு முறையில் திருப்தி இல்லையெனில் மாணவர்கள் தேர்வு எழுதலாம்- சிபிஎஸ்இ

Published On 2021-06-03 10:27 GMT   |   Update On 2021-06-03 10:32 GMT
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், தேர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்படும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது சிபிஎஸ்இ.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது, கூட்டத்தில் சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய் முடிவு எடுக்கப்பட்டது.

மாணவர்கள் பாதுகாப்புதான் முக்கியம் எனக் கூறி சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் தேர்ச்சி, மதிப்பெண் வழங்குவதற்கான மதிப்பீடு எவ்வாறு வரையறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்னும் 2-வது வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளா்.

இதுகுறித்து அனுராக் திரிபாதி கூறுகையில் ‘‘சிபிஎஸ்இ மதிப்பீடு வரையறை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இன்னும் 2 வாரத்திற்குள் தயாராகிவிடும். நிபுணர்கள் அனைத்து வகையான வாய்ப்புகளையும் ஆராய்ந்து அதன்பின் முடிவு எடுக்கப்படும்.

மாணவர்களுக்கு மதிப்பீடு வரையறையில் திருப்தி இல்லை என்றால், கொரோனாவிற்குப் பிறகு தேர்வு நடத்தப்படும். முடிவு வெளியிடப்படும்போது மாணவர்கள் எந்தவிதமான இடையூறையும் சந்திக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க உறுதியாக உள்ளோம். உயர்படிப்புக்கான அட்மிசன் தொடங்குவற்கு முன் அவர்கள் தேர்வு முடிவை பெறுவார்கள் உறுதியை மாணவர்களுக்கு அளிக்க விரும்புகிறோம்’’ என்றார்.
Tags:    

Similar News