செய்திகள்
லெகோ ராம் போரோ

அசாமில் கொரோனாவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ. பலி - ஒரு வாரத்துக்குள் 2-வது சோகம்

Published On 2021-05-30 00:31 GMT   |   Update On 2021-05-30 00:31 GMT
அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போரோ (வயது 63). கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நிலையில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்,
கவுகாத்தி:

அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போரோ (வயது 63). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த வியாழக்கிழமை கவுகாத்தி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு முதல் கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்த அவர், நேற்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். முதல முறை எம்.எல்.ஏ.வான லெகோ ராம் போரோவுக்கு 2 மகன்கள் உள்ளனர். அசாம் மாநில மற்றொரு எம்.எல்.ஏ.வான மஜேந்திர நர்சாரி, கொரோனாவால் கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 எம்.எல்.ஏ.க்கள் இறந்தது, அசாம் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ. போரோ மறைவுக்கு முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, முன்னாள் முதல்-மந்திரி சர்பானந்த சோனோவால் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News