செய்திகள்
மந்திரி ஜெய்சங்கர்

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மே 24-ம் தேதி அமெரிக்கா பயணம்

Published On 2021-05-21 23:23 GMT   |   Update On 2021-05-21 23:23 GMT
வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் வரும் 24ம் தேதி அமெரிக்கா செல்கிறார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வரும் 24-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். மே 24 முதல் 28-ம் தேதி வரை என அவர் அமெரிக்காவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது செயலர் அன்டோனியோ குட்டரெசை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார் எனவும், இந்தியாவில் தடையின்றி தடுப்பூசி கிடைப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதல் முறையாக மந்திரி ஜெய்சங்கர் அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News