செய்திகள்
கோப்புப்படம்

டவ்தே புயல் எதிரொலி - டெல்லியில் 60 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது

Published On 2021-05-19 22:50 GMT   |   Update On 2021-05-19 22:50 GMT
டவ்தே புயல் தாக்கம் காரணமாக டெல்லி, புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. வானிலை இதமாக காணப்பட்டு வருகிறது.
புது டெல்லி:

டவ்தே புயல் தாக்கம் காரணமாக டெல்லி, புறநகர் பகுதிகளில் காலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. வானிலை இதமாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

டெல்லி சப்தர்ஜங்கில் நேற்று காலை 8.40 மணி முதல் இரவு 8.30 மணி நிலவரப்படி 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. டெல்லி சப்தர்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலையாக 23.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 1951-ம் ஆண்டுக்கு பிறகு மே மாதம் பதிவான குறைந்த அளவு பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.

இதற்கு முன் கடந்த 1982-ம் ஆண்டு மே 13-ந் தேதி பதிவான குறைவான அதிகபட்ச வெப்பநிலை 24.8 டிகிரி செல்சியஸ் ஆகும்.
Tags:    

Similar News