செய்திகள்
கோப்புப்படம்

100 சதவீதம் தடுப்பூசி: ஒவ்வொரு கிராமங்களுக்கும் ரூ. 10 லட்சம் சிறப்பு மேம்பாட்டு நிதி- பஞ்சாப் முதலமைச்சர்

Published On 2021-05-18 10:21 GMT   |   Update On 2021-05-18 10:21 GMT
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்காக, சிறப்பு மேம்பாட்டு நிதியை அறிவித்துள்ளார் முதல்வர் அமரிந்தர் சிங்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்ற மிகத் தீவிரமாக பரவி வருகிறது. 2-வது அலையின்போது உயிரிழப்பு அதிகமாக உள்ளது. உயிரிழப்பை தவிர்க்க வேண்டுமேன்றால், ஒரே வழி அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான்.

ஆனால் நகரத்தில் வசிப்பவர்களும், கிராமத்தில் வசிப்பவர்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயங்குகிறார்கள். குறிப்பாக கிராம மக்கள் ஆர்வம் காட்டவில்லை.



இதனால் பஞ்சாப் மாநிலத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த கொரோனா முக்த் பிண்ட் அபியான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக, ஒவ்வொரு கிராமத்திற்கும் மேம்பாட்டு நிதியாக தலா 10 லட்சம் நிதி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்ர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News