செய்திகள்
மம்தா பானர்ஜி

நீதிமன்றம் முடிவை வழங்கும்: சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் மம்தா பானர்ஜி

Published On 2021-05-17 11:58 GMT   |   Update On 2021-05-17 11:58 GMT
இரண்டு அமைச்சர்கள் உள்பட நான்கு பேரை கைது செய்ததற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து, தர்ணாவில் ஈடுபட்டார்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் அடக்குமுறையை தாண்டி மம்தா பானர்ஜி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பதவி ஏற்று ஒருவாரம் கூட ஆகவில்லை. அதற்குள் மத்திய அரசு சிபிஐ-யை ஏவிவிட்டுள்ளது.

இரண்டு அமைச்சர்கள் உள்பட நான்கு பேரை விசாரணைக்கான சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். விசாரணைக்காக அழைத்துச் சென்று, மாநில அரசுக்கு தெரியாமல் எப்படி கைது செய்யலாம் என மம்தா பானர்ஜி ஆவேசம் அடைந்தார்.

சிபிஐ அலுவலத்திற்கு சென்று அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்னையும் கைது செய்துங்கள் என பொங்கி எழுந்தார். அதன்பின் தர்ணாவில் ஈடுபட்டார். இதனையறிந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிபிஐ அலுவலத்திற்கு எதிராக கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கோர்ட் முடிவை வழங்கும் எனக் கூறி மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.
Tags:    

Similar News