செய்திகள்
ஆய்வக சோதனை

டிஆர்டிஓ தயாரித்த கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு

Published On 2021-05-08 10:29 GMT   |   Update On 2021-05-08 10:29 GMT
பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள மருந்தை தண்ணீரில் கரைத்து நோயாளிகளை குடிக்கச் செய்ய வேண்டும்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் குறையாத நிலையில், மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன் மற்றும் மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடும் சுகாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இந்தியாவிற்கு பல்வேறு நாடுகள் உதவி செய்கின்றன. 

இந்நிலையில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை அவசர கால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கவேண்டும்.



டிஆர்டிஓ ஆய்வகம் மற்றும் ஐதராபாத்தை மையமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்கள் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளன.

இந்த மருந்தானது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுவதுடன், ஆக்சிஜன் செலுத்தவேண்டிய ஆபத்தான நிலையை குறைக்கிறது என பரிசோதனைகளில் நிரூபணமாகி உள்ளது. இதனையடுத்து, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்திருக்கிறது.
Tags:    

Similar News