செய்திகள்
நிலநடுக்கத்தில் சேதமடைந்துள்ள சுவர்கள்

அசாமில் இன்று மீண்டும் நிலநடுக்கம்- 6 முறை அடுத்தடுத்து ஏற்பட்டதால் மக்கள் பீதி

Published On 2021-04-29 10:05 GMT   |   Update On 2021-04-29 10:05 GMT
அசாமில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜோனித்பூர் நகரில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தேஜ்பூர், சோனித்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி இருந்தது.

இதனால் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பக்கத்து மாநிலங்களான மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நிலையில் அசாமில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜோனித்பூர் நகரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.6 பதிவாகி இருந்தது. நள்ளிரவு 12 மணியில் இருந்து இன்று அதிகாலை வரை 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் அதிகபட்சமாக 4.6 ரிக்டர் அளவுகோல் பதிவாகி இருந்தது. அடுத்தடுத்து 6 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர். அவர்கள் விடிய விடிய தூங்காமல் வீதியில் தஞ்சம் அடைந்தனர்.

Tags:    

Similar News