செய்திகள்
கைது

ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி விற்றதாக டாக்டர் உள்பட 4 பேர் கைது

Published On 2021-04-25 23:32 GMT   |   Update On 2021-04-25 23:32 GMT
குஜராத்தில் கொரோனாவின் 2-வது அலையின் அசுர தாக்குதலால் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது
சூரத்:

குஜராத்தில் கொரோனாவின் 2-வது அலையின் அசுர தாக்குதலால் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கான மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர், தடுப்பூசி போன்றவற்றுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சூரத் நகரில், தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து, ரகசியமாக கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக குற்றத்தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி ஒரு டாக்டர் மற்றும் 3 பேரை கைது செய்தனர். அவர்கள் சூரத் மற்றும் சுற்றுப்புறங்களில் கொரோனா தீவிர பாதிப்படைந்த ரெம்டெசிவிர் மருந்துக்காக காத்திருப்பவர்களின் தேவை அறிந்து, கூடுதல் விலைக்கு மருந்துகளை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து மருந்துகள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News