செய்திகள்
பிரசாரத்தில் பேசிய அசாதுதீன் ஓவைசி

கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு என்ன செய்தீர்கள் - திரிணாமுல் காங்கிரசுக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி

Published On 2021-04-13 23:12 GMT   |   Update On 2021-04-13 23:12 GMT
நரேந்திர மோடியும், மம்தா பானர்ஜியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 4 கட்டங்களும் முறையே ஏப்ரல் 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. அந்த வகையில் 44 தொகுதிகளுக்கு 5-ம் கட்ட தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் அப்பாஸ் சித்திக்யூ என்பவரின் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. 

மேலும், மேற்கு வங்காள தேர்தலில் ஐதராபாத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி 5-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது.


 
இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் அசன்சோல் பகுதியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய ஓவைசி, நரேந்திர மோடிக்கும் (பிரதமர்), மம்தா பானர்ஜிக்கும் (மேற்கு வங்காள முதல்மந்திரி) எந்த வித்தியாசமும் கிடையாது. அவர்கள் இருவரும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். உண்மையில், அவர்கள் இருவரும் சகோதர, சகோதரிகள். அவர்கள் பேச்சால் மக்களை ஏமாற்றுகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு என்ன செய்தது என்பது குறித்து கூற வேண்டும் என்று நான் சவால் விடுகிறேன் என தெரிவித்தார்.
Tags:    

Similar News