செய்திகள்
ரெயில் சேவை

ரெயில் சேவையை குறைக்கவோ, நிறுத்தவோ நாங்கள் திட்டமிடவில்லை - ரெயில்வே வாரியம்

Published On 2021-04-09 21:16 GMT   |   Update On 2021-04-09 21:16 GMT
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் உள்ள சில நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு அச்சத்தால் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற பீதியில் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரெயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

ரெயில் சேவையை குறைக்கவோ, நிறுத்தவோ நாங்கள் திட்டமிடவில்லை. தேவைக்கேற்ப ரெயில்கள் இயக்கப்படும். எனவே, பீதி அடையத் தேவையில்லை. கூட்ட நெரிசல் காரணமாக ரெயில்கள் அதிகம் தேவைப்பட்டால், குறுகிய இடைவெளியில் கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும். எனவே பயப்பட வேண்டாம்.

கோடை காலங்களில் வழக்கமாக ரெயில்களில் கூட்டம் அதிகமாகவே இருக்கும். நெரிசலை தவிர்க்க கூடுதலாக ரெயில்களை அறிவித்துள்ளோம். அதனால் ரெயில்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை. தேவைப்பட்டால், இன்னும் அதிக ரெயில்கள் இயக்கப்படும் என்று ஒவ்வொருவருக்கும் உறுதி அளிக்கிறேன்.

ரெயில்களில் பயணிக்க கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ரெயில் சேவையை குறைப்பதற்கோ, நிறுத்துவதற்கோ அந்த மாநில அரசு எங்களுக்கு கோரிக்கை விடுக்கவில்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News