செய்திகள்
மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி

ஹூக்ளி மாவட்டத்தில் இன்று மோடி-மம்தா பானர்ஜி போட்டி பிரசாரம்

Published On 2021-04-03 08:09 GMT   |   Update On 2021-04-03 08:09 GMT
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள மாநிலத்துக்கு 8 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த 27-ந் தேதி 30 இடங்களுக்கும் கடந்த 1-ந் தேதி 30 தொகுதிக்கும் தேர்தல் நடந்தது.

கொல்கத்தா:

மேற்குவங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேற்கு வங்காளத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் பா. ஜனதா உள்ளது. இதற்காக பா.ஜனதாவின் ஒட்டு மொத்த படையும் மேற்கு வங்காளத்தை சுற்றி வருகிறது. 3-வது அணியாக காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி இருக்கிறது.

இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியும், முதல்-மந்திரி மம்தா பானர் ஜியும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டனர். இருவரும் ஹூக்ளி மாவட்டத்தில் பிரசாரம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

மம்தா பானர்ஜி தரகேஸ்வர் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். இந்த இடம் இந்து பக்தர்கள் அதிகம் நிறைந்த பகுதி ஆகும். 2019-ல் இங்கு நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேர்ந்த அபர்உபா 1,142 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரை தோற்கடித்தார்.

பிரதமர் மோடி பிற்பகலில் ஹரிபால் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். அவர் பா.ஜனதா வேட்பாளருக்கு தீவிரமாக ஆதரவு திரட்டினார். மோடி ஏற்கனவே பலமுறை மேற்குவங்காளத்தில் பிரசாரம் செய்திருந்தார்.

மோடியும், மம்தா பானர்ஜியும் பிரசாரம் செய்த இடங்கள் ஒரே எம்.பி. தொகுதியில் வருகிறது. அரம்பாக் பாராளுமன்ற தொகுதியின் கீழ் தான் தரகேஸ்வர், ஹரிபால் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வருகிறது.

2016 சட்டமன்ற தேர்தலில் இந்த 2 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள மாநிலத்துக்கு 8 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த 27-ந் தேதி 30 இடங்களுக்கும் கடந்த 1-ந் தேதி 30 தொகுதிக்கும் தேர்தல் நடந்தது.

வருகிற 6-ந் தேதி 31 தொகுதிகளுக்கு 3-வது கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

Tags:    

Similar News