செய்திகள்
காங்கிரஸ்

மேற்குவங்காள தேர்தல் - மேலும் 39 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Published On 2021-03-20 19:23 GMT   |   Update On 2021-03-20 19:23 GMT
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணமுல், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 291 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் முதல் மந்திரியுமான மம்தா பானா்ஜி வெளியிட்டார்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 13 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டிலும், 34 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலையும் அக்கட்சி சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள மேலும் 39 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை அக்கட்சி நேற்று இரவு வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News