செய்திகள்
கோப்புபடம்

சட்டசபை தேர்தல்: கேரளாவில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு

Published On 2021-03-12 10:33 GMT   |   Update On 2021-03-12 10:33 GMT
தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

திருவனந்தபுரம்:

கேரளாவில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரசு பொதுதேர்வுகள் வருகிற 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு தகுந்தாற்போல் மாதிரி தேர்வுகள் கடந்தவாரம் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்நிலையில் கேரளாவில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

ஆனால் அது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், தேர்வுகளை தள்ளிவைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் மத்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க மத்திய தேர்தல் ஆணையம் கேரள அரசுக்கு அனுமதிஅளித்தது. பொதுத் தேர்வுகளை ஏப்ரல் 8-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News