செய்திகள்
கோப்புப்படம்

தெலுங்கானா பெண் மந்திரிக்கு கொரோனா தொற்று

Published On 2021-03-09 00:17 GMT   |   Update On 2021-03-09 00:17 GMT
சத்தீஷ்கார் மாநில சுகாதாரத்துறை மந்திரி மற்றும் வருவாய்த்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியினர் மற்றும் பெண்கள் நலத்துறை மந்திரியாக இருப்பவர் சத்யவதி ரத்தோர்.

இவர் கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் சத்தீஷ்கார் மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோ மற்றும் வருவாய்த்துறை மந்திரி ஜெய்சிங் அகர்வால் ஆகியோருக்கும் கடந்த சில தினங்களாக உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர். மேலும் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

சத்தீஷ்கார் மாநில எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் தெரியவந்தது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News