செய்திகள்
கோப்புப்படம்

37 நாட்களுக்கு பிறகு தாராவியில் மீண்டும் இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு

Published On 2021-02-24 23:33 GMT   |   Update On 2021-02-24 23:33 GMT
37 நாட்களுக்கு பிறகு தாராவியில் மீண்டும் இரட்டை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பை:

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி, மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் பெரும் போராட்டத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் சமீப நாட்களாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தாராவியிலும் எதிரொலித்து உள்ளது.

தாராவியிலும் படிப்படியாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நேற்று இரட்டை இலக்கத்தை தொட்டது. அதன்படி புதிதாக 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் இதுவரை தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 41 ஆக அதிகரித்தது.

தாராவியில் ஜனவரி 17-ந் தேதி 10 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன் பிறகு பாதிப்பு ஒற்றை இலக்கத்திலும், ஒரு சில நாட்கள் தொற்று பாதிப்பு இல்லாமலும் இருந்தது. இந்தநிலையில் 37 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகப்பட்ச பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தற்போது மீண்டும் தாராவியில் பாதிப்பு அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 690 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு விவரம் வெளியிடப்படவில்லை.
Tags:    

Similar News