செய்திகள்
ராகுல் காந்தி

மீனவர்களுடன் வலைவிரித்து மீன் பிடித்த ராகுல் காந்தி: திடீரென கடலில் நீந்தி அதிர்ச்சி அளித்தார்

Published On 2021-02-24 12:15 GMT   |   Update On 2021-02-24 12:15 GMT
கேரளாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மீனவர்களுடன் நடுக்கடல் சென்று மீன்பிடித்தார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப் பயணமாக கேரளா சென்றுள்ளார். அவர் மீனவர்களுடன் இன்று உரையாடினார். அப்போது அவர்களின் துயரம் குறித்து கேட்டறிந்தார்.

அதற்கு முன் மீனவர்கள் கடலில் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை நேரில் அறிந்து கொள்ள கடலில் மீனவர்களுடன் சென்று மீன்பிடிக்க விரும்பினார். இதனால் இன்று மீனவர்களுடன் காலை 5.15 மணிக்கு கடலுக்கு சென்றார். நடுக்கடல் சென்றதும் மீனவர்கள் வலைவிரித்தனர். அவர்களுடன் ராகுல் காந்தியும் வலையை விரித்து மீன் பிடித்தார்.

இதற்கிடையில் திடீரென ராகுல் காந்தி உற்சாக மிகுதியில் கடலுக்குள் குதித்தார். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அச்சமடைந்தனர். ஆனால் ராகுல் காந்தி கூலாக கடலில் நீந்தினார். சுமார் 10 நிமிடங்கள் கடலில் நீந்தியபின் படகில் ஏறினார். பின்னர் 7.45 மணியளவில் கரை திரும்பினார்.

ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், டின் பிரதாபன் எம்.பி. உள்ளிட்டோர் சென்றனர். கடலுக்குள் சென்ற ராகுல் காந்தி ‘‘மீனவர்கள் வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இன்று காலை எனது சகோதரர்களுடன் கடலுக்குச் சென்றேன். கடலுக்கு சென்று, படகில் மீண்டும் கரைக்கு திரும்பும்வரை ஒட்டுமொத்தமாக கஷ்டமான நிலையை அடைகிறார்கள். கடலில் சென்று வலைவிரித்து மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். வேறு சிலர் பயன்படைகிறார்கள்.

நான்கள் மீன் பிடிக்க விரும்பினோம். ஆனால் ஒரேயொரு மீன்தான் கிடைத்தது. முதலீடு செய்த நிலையிலும், வலை காலியாகவே வந்தது. இதுதான் என்னுடைய அனுபவம்’’ என்றார்.
Tags:    

Similar News