செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளில் மூன்றாம் இடத்தில் இந்தியா

Published On 2021-02-18 10:15 GMT   |   Update On 2021-02-18 10:26 GMT
அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதுவரை 1.09 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.06 கோடி பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1.37 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றுக்கு இதுவரை 1.56 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.42 சதவீதமாக குறைந்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 94,22,228 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இதன்மூலம், அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டனைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

அதேபோல் கடந்த 7 நாட்களாக தினசரி பாதிப்பு  விகிதம் குறைந்து வருகிறது. பிப்ரவரி 1ம் தேதி பாதிப்பு விகிதம் 1.89 சதவீதமாக இருந்த நிலையில், இன்று 1.69 சதவீதமாக குறைந்துள்ளது என சுகாதாரத்துறை கூறி உள்ளது.
Tags:    

Similar News