செய்திகள்
வருமான வரி

மூத்த குடிமக்களுக்கு வருமான வரி ரத்து... ஆனால் ஒரு நிபந்தனை

Published On 2021-02-01 07:45 GMT   |   Update On 2021-02-01 08:38 GMT
2021-22 நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 6.8% ஆக இருக்கும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

வருமான வரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க புதிய குழு அமைக்கப்படும். சில நிபந்தனைகளின் கீழ் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி ரத்து செய்யப்படும். 

நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், மூத்த குடிமக்கள் மீதான சுமையை குறைக்கிறோம். மாத வருவாயாக, ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதுக்கு மேற்பட்டோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்பு முறைக்கு ஆளாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரட்டை வரிவிதிப்பை அகற்றுவதற்கு புதிய விதிகள் கொண்டு வரப்படும்.  

நாட்டின் நிதி பற்றாக்குறை 2020-2021 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்றும், 2021-22 ஆண்டில் 6.8 சதவீதமாக ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News