செய்திகள்
அமரிந்தர் சிங், கெஜ்ரிவால்

உயர்மட்ட குழுவில் அமரிந்தர் சிங் இடம் பிடித்திருந்தார்: ஆர்டிஐ ஆவணத்தை வைத்து ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Published On 2021-01-24 11:17 GMT   |   Update On 2021-01-24 11:17 GMT
வேளாண் சட்டங்களை தற்போது எதிர்த்து வரும் பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், உயர்மட்ட குழுவில் இடம் பிடித்துள்ளார் என்பதை ஆர்டிஐ ஆவணம் மூலம் ஆம் ஆத்மி வெளிப்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகளே அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர். நாளை மறுதினம் (ஜனவரி 26-ந்தேதி) குடியரசுத்தினம் அன்று ஒரு லட்சம் டிராக்டர்கள் பேரணி நடத்த இருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமரிந்தர் சிங் மீது குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக இந்திய விவசாய மாற்றம் என்பதற்கான முதலமைச்சர்களை கொண்ட உயர்மட்டக்குழுவில் அமரிந்தர் இடம் பிடித்துள்ளார் என்று ஆர்டிஐ ஆவணத்தை வெளியிட்டு ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

10 பேரை கொண்ட கொண்ட முதலமைச்சர் குழுவில் அமரிந்தர் சிங், அப்போதைய மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்நாவிஸ், ஹரியான முதல்வர் மனோகர் லால் கட்டார், அருணாசலப பிரதேச முதல்வர் பீமா கண்டு, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத், ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தக்குழு மாற்றத்திற்கு உத்தரவி அளித்துள்ளது.
Tags:    

Similar News