இந்தியாவில் மத்திய அரசு மின் கட்டண முறையில் மாற்றம் செய்யது இருப்பதாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவில் மின் கட்டண முறையில் மாற்றம் செய்யப்படுவதாக வைரலாகும் தகவல்
பதிவு: ஜனவரி 22, 2021 10:47
கோப்புப்படம்
இந்தியா முழுக்க ஒரே மாதிரியான மின் கட்டண முறை அமலாக்கப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில், `இந்தியாவில் மோடி அரசாங்கம் ஒரே நாடு, ஒரே கட்டணம் சட்டத்தை அமலாக்கி இருக்கிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.'
இந்த தகவல் மேற்கு வங்கத்திற்கா பாஜக பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், இது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் இல்லை. வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே மின் கட்டண முறை சட்டத்தை அமலாக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இதுபற்றிய இணைய தேடல்களில், ஜூலை 15, 2019 அன்று பாஜக எம்பி மாலிக் நாடு முழுக்க ஒரே மாதரியான மின் கட்டணத்தை அமலாக்க கோரும் திட்டத்தை முன்வைத்து பேசியதை பற்றிய செய்தி தொகுப்பு காணக்கிடைத்தது. எனினும், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அந்த வகையில் நாடு முழுக்க ஒரே மின்கட்டண முறையை அமலாக்கும் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Related Tags :