புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போகச் செய்யும் என மத்திய அரசு தெரிவித்தது.
இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்- மத்திய அரசு
பதிவு: ஜனவரி 21, 2021 13:30
நீட் தேர்வு
சென்னை:
புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தந்தால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போகச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கு வரவில்லை என்றும், புதுச்சேரி அரசின் சட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு 6 வாரம் அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு பதில் மனுவில் கூறி உள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :