திருவனந்தபுரம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலின் சரக்கு பெட்டியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்தது- செயினை பிடித்து இழுத்து நிறுத்திய பயணிகள்
பதிவு: ஜனவரி 17, 2021 09:15
தீப்பற்றி எரியும் ரெயில் பெட்டி
திருவனந்தபுரம்:
மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. இன்று காலை 7.45 மணயளவில் திருவனந்தபுரத்தை நெருங்கியபோது, ரெயிலின் பார்சல் பெட்டியில் தீப்பிடித்து அதில் இருந்து புகை வெளியேறுவதை பயணிகள் சிலர் கவனித்தனர். உடனடியாக செயினைப் பிடித்து ரெயிலை நிறுத்தினர். வர்கலா அருகே ரெயில் நின்றது. தீ விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். தீ சிறிது நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. தீப்பிடித்த பார்சல் பெட்டி அகற்றப்பட்டது.
தீப்பிடித்ததை பயணிகள் உடனடியாக கண்டுபிடித்து ரெயிலை நிறுத்தியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பார்சல் பெட்டியின் முன்பகுதியில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் கருகி உள்ளன. மேலும் சில பொருட்களும் சேதமடைந்துள்ளன. சேதம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
Related Tags :