செய்திகள்
பரிசோதனைக்கு செல்லும் விமான பயணிகள்

இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று எண்ணிக்கை 71 ஆக உயர்வு

Published On 2021-01-06 06:20 GMT   |   Update On 2021-01-06 06:20 GMT
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட  பல நாடுகள் தடை செய்துள்ளன. சமீபத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்து வருகிறது. இதில் நாடு முழுவதும் 58 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்று மேலும் 13 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 71 ஆக அதிகரித்துள்ளது. 

Tags:    

Similar News