செய்திகள்
பறவைக் காயச்சலால் இறந்த கோழிகள்

பறவைக் காய்ச்சல் எதிரொலி- டெல்லியில் கண்காணிப்பு மையம் அமைப்பு

Published On 2021-01-06 05:29 GMT   |   Update On 2021-01-06 05:51 GMT
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், டெல்லியில் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த படாத பாடு பட்டு வரும் நிலையில், புதிய உயிர்க்கொல்லி நோய் கிளம்பியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. ஏராளமான பறவைகள் இறந்துள்ளன. இதனால் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி உள்ள நிலையில் டெல்லியில் கண்காணிப்பு மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாநில அதிகாரிகள் இந்த கண்காணிப்பு மையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

மாநில அரசுகள், பறவைகள் இறப்பு விவரங்கள் குறித்த அறிக்கையை வாரம் ஒருமுறை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News