செய்திகள்
ஊழியரிடம் நலம் விசாரித்த ரத்தன் டாடா

முன்னாள் ஊழியர் வீடு தேடிச்சென்று நலம் விசாரித்த ரத்தன் டாடா - குவியும் பாராட்டுகள்

Published On 2021-01-05 20:39 GMT   |   Update On 2021-01-05 20:39 GMT
உடல்நலம் குன்றிய முன்னாள் ஊழியர் வீடு தேடிச்சென்று நலம் விசாரித்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மும்பை:

இந்தியாவின் பிரபல தொழிலதிபராக திகழ்பவர் ரத்தன் டாடா (83). இவர் ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்பட பலருக்கு தனது தொண்டு நிறுவனம் மூலம் உதவிகளைச் செய்துவருகிறார்.

இந்நிலையில், தன்னிடம் வேலை செய்த உடல்நலம் குன்றிய முன்னாள் ஊழியரை அவரது வீட்டுக்கே சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார் ரத்தன் டாடா. 

பிரெண்ட்ஸ் சொசைட்டியில் வசித்து வரும் முன்னாள் ஊழியர் வீட்டுக்கு ரத்தன் டாடா காரில் சென்றார். அங்கு சென்ற அவர் ஊழியரின் உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்தார். ரத்தன் டாடாவின் வருகையை எதிர்பாராத அந்த ஊழியரின் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் திகைத்து நின்றனர்.

முன்னாள் ஊழியர் ஒருவரின் வீடு தேடிச் சென்று சந்தித்து நலம் விசாரித்த முன்னணித் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இந்தச் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது. இதுதொடர்பானபுகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News