செய்திகள்
கோப்புப்படம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயி தற்கொலை - வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடிதம்

Published On 2021-01-02 23:46 GMT   |   Update On 2021-01-02 23:46 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய கா‌‌ஷ்மீர் சிங் என்ற விவசாயி நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
காஜியாபாத்:

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லையில் ஒரு மாதத்துக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கா‌‌ஷ்மீர் சிங் என்ற விவசாயி நேற்று தற்கொலை செய்துகொண்டார். உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூரைச் சேர்ந்த கா‌‌ஷ்மீர் சிங், உத்தரபிரதேச- டெல்லி எல்லையில் உள்ள காஜிப்பூரில், ஒரு நடமாடும் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவர் ஒரு தற்கொலை கடிதத்தையும் எழுதியிருக்கிறார். அதில், விவசாயிகள் நலன்களுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்று எழுதியிருப்பதாக பாரதீய கிசான் சங்கத்தைச் சேர்ந்த ஒரு நிர்வாகி தெரிவித்தார்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் உடல், அவரது பேரன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கா‌‌ஷ்மீர் சிங் குடும்பத்துக்கு அரசாங்கம் ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று பாரதீய கிசான் சங்க தேசிய செய்தித்தொடர்பாளர் ராகே‌‌ஷ் திகாயத் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News