search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி மரணம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்ட களத்தில் இருந்த விவசாயிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
    • இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

    புதுடெல்லி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர்.

    விவசாயிகளை டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிசெய்ய தடுப்புகள் வைத்து போலீசார் மறித்துள்ளனர். போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே அரியானாவின் அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை மீற முயன்றவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் முன்னேற முடியாமல் கடந்த 3 நாளாக சம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற முதியவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் பஞ்சாப்பின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின், மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமாரக்குடியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 70), விவசாயி. இவர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மனு எழுதிவிட்டு, அதனை நகல் எடுப்பதற்காக சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    இது பற்றி அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் உடனே ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ராஜதுரை, கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஆத்தூர் அருகே வேட்டைக்கு சென்ற விவசாயி துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை கலக்காம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ் (வயது 45).விவசாயி.

    இவர் தனது நண்பர்கள் பெரியசாமி, பாண்டி, ஆண்டி ஆகியோருடன் கருமந்துறை மலைப்பகுதிக்கு வேட்டைக்கு செல்வது வழக்கம்.

    அங்கு மான், காட்டுப்பன்றி, மற்றும் வன விலங்குகளை வேட்டையாடி வருவார்கள். நேற்று இரவு இவர்கள் 4 பேரும் கல்வராயன் மலை, கரியகோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மோடூர் மலைக்கிராமத்திற்கு வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்றனர்.

    அவர்கள் புதர் மறைவில் இருந்து வனவிலங்குகளை கண்காணித்தனர்.

    அப்போது செல்வராஜ் முதுகில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். உடனே செல்வராஜியின் நண்பர்கள் 3 பேரும் அவரது உடலை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவரது வீட்டு முன்பு பிணத்தை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கரியகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரெண்டு சூரியமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். செல்வராஜியின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேட்டைக்கு சென்ற செல்வராஜ் எப்படி குண்டு பாய்ந்து இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. புதர் மறைவில் இருந்து வனவிலங்கை சுடும்போது தவறுதலாக அவர் மீது குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது அவருடன் சென்ற நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டாரா? கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக் கட்டப்பட்டாரா? என்பது புரியாத புதிராக உள்ளது.

    செல்வராஜியின் உடலை அவரது வீட்டு முன்பு போட்டு சென்ற நண்பர்கள் பெரியசாமி, பாண்டி, ஆண்டி ஆகிய 3 பேரும் குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல் தலை மறைவாகி விட்டனர்.

    இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.நண்பர்கள் சிக்கினால் தான் செல்வராஜ் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

    மர்மமாக இறந்த செல்வராஜிக்கு சரோஜா என்ற மனைவியும், ராமமூர்த்தி (9), சத்யமூர்த்தி (8), ஜெயவேல் (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் செல்வராஜியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இச்சம்பவம் கருமந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×