என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற விவசாயி தவறி விழுந்து பலி
    X

    ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற விவசாயி தவறி விழுந்து பலி

    ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற விவசாயி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சமுதாயம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (48) விவசாயி.

    இவர் சூளமேனி அருகே செங்கரையில் உள்ள காட்டு செல்லி அம்மன் கோவிலுக்கு செல்ல ஊத்துக்கோட்டை வந்தார். இங்கிருந்து புறப்பட்ட ஆட்டோவில் ஏறினார்.

    சூளமேனி கிராம எல்லையில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவிலிருந்து தவறி கீழே விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்து விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து ஆந்திராவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (69). கூலி தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் கூலி வேலை செய்வதற்காக சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மோதியது.

    இதில் படுகாயம்அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் அனுமந்து விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×