செய்திகள்
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல்

Published On 2020-12-26 08:39 GMT   |   Update On 2020-12-26 08:39 GMT
மத்திய பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போபால்:

பெண்களை திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக மதம் மாற்றும், 'லவ் ஜிகாத்' முறைக்கு எதிராக சமீப காலமாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதையடுத்து, உத்தர பிரதேசத்தில் அதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதேபோல் பாஜக ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்திலும், கட்டாய மதமாற்றம் செய்வோரை தண்டிக்கும் வகையில், 'மத சுதந்திர சட்டம்' என்ற சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத சுதந்திர சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு இந்த சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
Tags:    

Similar News