செய்திகள்
கோப்புப்படம்

சத்தீ‌‌ஷ்காரில் 3 ஆண்டுகளில் 216 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Published On 2020-12-23 23:56 GMT   |   Update On 2020-12-23 23:56 GMT
சத்தீ‌‌ஷ்காரில் கடந்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கி சண்டையில் 216 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்:

சத்தீ‌‌ஷ்கார் மாநிலத்தில் பூபே‌‌ஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. நேற்று அம்மாநில சட்டசபையில், நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

அதற்கு மாநில உள்துறை மந்திரி தம்ரத்வாஜ் சாகு, எழுத்துமூலம் பதில் அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சத்தீ‌‌ஷ்காரில் கடந்த 3 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கி சண்டையில் 216 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அதிக அளவாக சுக்மா மாவட்டத்தில் மட்டும் 82 பேர் பலியானார்கள்.

அதுபோல், கடந்த 3 ஆண்டுகளில், 966 நக்சலைட்டுகள், ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தனர். அதிலும் சுக்மா மாவட்டத்தில்தான் அதிகமானோர் சரண் அடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News