செய்திகள்
ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்- பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி

Published On 2020-12-23 13:39 GMT   |   Update On 2020-12-23 13:40 GMT
இங்கிலாந்து, ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், இந்தாவில் எப்போது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி, ரஷியாவின் ஸ்புட்னிக் வி ஆகியவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘‘சீனா, அமெரிக்க, இங்கிலாந்து, ரஷியா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.



உலகம் முழுவதும் தற்போது வரை 23 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி எப்போது தொடங்கும்’’ என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News