செய்திகள்
கோப்புப்படம்

12 மாநிலங்களில் இணையதளம் பயன்படுத்தாத 60 சதவீத பெண்கள்

Published On 2020-12-15 23:55 GMT   |   Update On 2020-12-15 23:55 GMT
12 மாநிலங்களில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் இதுவரை இணையதளமே பயன்படுத்தியது இல்லை என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வகம் என்ற அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியது. 6 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், ஆந்திரா, அசாம், பீகார், குஜராத், கர்நாடகா, மராட்டியம், மேகாலயா, தெலுங்கானா, திரிபுரா, மேற்கு வங்காளம், யூனியன் பிரதேசங்களான தாத்ரா நகர் ஹவேலி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் இதுவரை இணையதளமே பயன்படுத்தியது இல்லை என்று தெரிய வந்தது.

அவர்களுடன் ஒப்பிடுகையில், அதிகமான ஆண்கள் இணையதளம் பயன்படுத்தி உள்ளனர். 7 மாநிலங்களில் சுமார் 50 சதவீத ஆண்கள் இணையதளம் பயன்படுத்தி இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆந்திரா, பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பெண்களிடையே எழுத்தறிவு சதவீதம் குறைவாக உள்ளது. கேரளா, லட்சத்தீவு, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பெண்களிடையே எழுத்தறிவு சதவீதம் அதிகமாக உள்ளது.
Tags:    

Similar News