ஐ.ஐ.டி. 2020 சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி அனைத்து துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என உரையாற்றினார்.
அனைத்து துறையிலும் சீர்திருத்தங்கள் - ஐஐடி சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
பதிவு: டிசம்பர் 04, 2020 23:36
பிரதமர் மோடி
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி ஐ.ஐ.டி. 2020 உலக மாநாட்டில் காணொலி காட்சி வழியே இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பணியாற்றும் வழிகளில் கடல் அளவு மாற்றங்களை இந்தியா பார்த்து வருகிறது. ஒருபோதும் நடக்காது என நாம் நினைத்த விஷயங்கள் அதிவிரைவுடன் நடந்து வருகின்றன.
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் உருமாற்றம் ஆகிய கொள்கைகளில் எங்களுடைய அரசு முழு அளவில் ஈடுபட்டு வருகிறது.
சீர்திருத்தங்கள் எந்தத் துறையிலும் விடுபட்டுப் போகவில்லை. கொரோனா தொற்றுக்கு பின்னர் மீண்டும் படித்தல், மீண்டும் நினைவு கொள்ளல் மற்றும் மீண்டும் கண்டுபிடித்தல் என்ற நிலை இருக்கும் என தெரிவித்தார்.
Related Tags :