செய்திகள்
விவசாய சங்க தலைவர்

நாடு முழுவதும் 8-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் - விவசாய சங்கங்கள் அழைப்பு

Published On 2020-12-04 14:12 GMT   |   Update On 2020-12-04 14:12 GMT
நாடு முழுவதும் வரும் 8-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் பல்வேறு எல்லைகளில் 9 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்களுக்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, விவசாயிகள் தங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சார்பில் வரும் 8-ம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அரியானா-டெல்லி எல்லையையான சிங்கு பகுதியில் போராட்டம் நடத்திவரும் பாரதீய கிசான் அமைப்பின் பொதுச்செயலாளர் லஹோவால் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 

நேற்று நடந்த பேச்சுவார்த்தையின்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என அரசாங்கத்திடம் கூறினோம். 

நாடு முழுவதும் டிசம்பர் 5-ம் தேதி (நாளை) பிரதமர் மோடியின் உருவப்படங்கள்
எரிக்கப்படும். டிசம்பர் 8-ம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்துள்ளோம் என்றார்.
Tags:    

Similar News