செய்திகள்
எக்ஸ்பிரஸ் ரெயில்

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்- முக்கிய ரெயில்களை ரத்து செய்தது வடக்கு ரெயில்வே

Published On 2020-12-02 02:57 GMT   |   Update On 2020-12-02 02:57 GMT
பஞ்சாப் மாநில விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், வடக்கு ரெயில்வே சில ரெயில்களை ரத்து செய்துள்ளது.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. அதேசமயம் போராட்டமும் நீடிக்கிறது.

பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் நீடிப்பதால் வடக்கு ரெயில்வே இன்று சில ரெயில்களை ரத்து செய்துள்ளது. சில ரெயில்களை குறிப்பிட்ட தூரம் வரை இயக்குகிறது. சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

இன்று முதல் இயக்கப்படுவதாக இருந்த அஜ்மீர்- அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாளை முதல் இயக்கப்படவிருந்த அமிர்தசரஸ்-அஜ்மீர் சிறப்பு ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் இயக்கப்பவிருந்த திப்ருகர்-அமிர்தசரஸ், அமிர்தசரஸ்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பதிண்டா-வாரணாசி எக்ஸ்பிரஸ் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் இயக்கப்படவிருந்த நான்டெட்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், புதுடெல்லி வரை இயக்கப்படுகிறது. பாந்த்ரா டெர்மினஸ்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் சண்டிகர் வரை இயக்கப்படுகிறது.

அமிர்தசரஸ்-ஜெய்நகர் எக்ஸ்பிரஸ் அமிர்தசரஸ், டான்டரன், பீஸ் வழியாக திருப்பிவிடப்படுகிறது. துர்க்-ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் லூதியானா ஜலந்தர் கன்டோன்மென்ட், பதான்கோட் கன்டோன்மென்ட் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். 4ம் தேதிமுதல் இயக்கப்படவிருந்த ஜம்மு தாவி-துர்க் எக்ஸ்பிரஸ் பதான்கோட் கன்டொன்மென்ட், ஜலந்தர் கன்டோன்மென்ட் லூதியானா வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News