செய்திகள்
கோப்புப்படம்

அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணியாளர்கள் 60 பேருக்கு கொரோனா

Published On 2020-11-23 19:03 GMT   |   Update On 2020-11-23 19:03 GMT
ஆமதாபாத்தின் அஸ்வாரா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவ பணியாளர்கள் 60 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
ஆமதாபாத்:

நாட்டில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இந்த மாநிலத்தின் ஆமதாபாத் நகரில், வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த ஒருவாரமாக தற்போது மீண்டும் வேகமெடுத்து உள்ளது. ஆமதாபாத்தின் அஸ்வாரா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தான் அதிகளவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவ பணியாளர்கள் 60 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன், மற்றவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட 430 மருத்துவ பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், ஒரு நர்ஸ் உள்பட 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News