செய்திகள்
திலீப் ராய்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் - முன்னாள் மத்திய மந்திரி திலீப் ராயின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு

Published On 2020-10-27 22:11 GMT   |   Update On 2020-10-28 07:12 GMT
நிலக்கரி படுகை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி திலீப் ராயின் 3 ஆண்டு ஜெயில் தண்டனையை நிறுத்திவைத்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசில் மத்திய நிலக்கரி துறை இணை மந்திரியாக இருந்தவர் திலீப் ராய். அவர் மீது நிலக்கரி படுகை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில், திலீப் ராய் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. திலீப் ராய்க்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது. அதே சமயத்தில், மேல்முறையீடு செய்வதற்காக, ஒரு மாத கால ஜாமீனும் அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் திலீப் ராய் மேல்முறையீடு செய்தார். நேற்று இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுரேஷ்குமார் கெயிட், திலீப் ராய்க்கான 3 ஆண்டு ஜெயில் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.

பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 25-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Tags:    

Similar News