செய்திகள்
பிரதமர் மோடி

பீகார் சட்டசபை தேர்தல் - பாட்னா உள்ளிட்ட இடங்களில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

Published On 2020-10-27 18:17 GMT   |   Update On 2020-10-27 18:17 GMT
பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பாட்னா உள்ளிட்ட இடங்களில் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி:

பீகார் மாநில சட்டசபைக்கான முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பீகார் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி முதல்கட்டமாக 23ம் தேதி சசாரம், கயா மற்றும் பாகல்பூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பாட்னா உள்ளிட்ட இடங்களில் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.

பீகார் மாநிலத்தின் தர்பங்கா, முசாபர்பூர் மற்றும் பாட்னா உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். 
Tags:    

Similar News