செய்திகள்
சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் போலீசார்

உ.பி.யில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை- அரசியல் பகை காரணமா?

Published On 2020-10-17 03:46 GMT   |   Update On 2020-10-17 03:46 GMT
உத்தர பிரதேசத்தில் பாஜக தலைவரை சுட்டுக் கொன்றது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்துகின்றனர்.
பிரோசாபாத்:

உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் மண்டல பாஜக தலைவர் டி.கே.குப்தா நேற்று இரவு தனது கடையை அடைத்துவிட்டு புறப்பட்டு சென்றார். அப்போது பைக்கில் வந்த நபர்கள் திடீரென குப்தாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். 

பலத்த காயமடைந்த குப்தாவை மீட்டு ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல் பகை காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. 

நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள துண்ட்லா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக குப்தா பிரச்சாரம் செய்த நிலையில் அவர் கொல்லப்பட்டது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News